×

ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் முல்தானில் இன்று கோலாகல தொடக்கம்: 6 நாடுகள் பங்கேற்பு, முதல் போட்டியில் பாக். – நேபாளம் பலப்பரீட்சை

முல்தான்: இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பாகிஸ்தானின் முல்தான் நகரில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. ஆசிய நாடுகளில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் மோதும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. பிசிசிஐ எதிர்ப்பு காரணமாக சில போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இலங்கையிலும் நடைபெற உள்ளன.

ஏ பிரிவில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தானில் உள்ள முல்தானில் இன்று நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் செப்.2ல் இலங்கையின் பல்லெகெலே மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் கட்ட லீக் சுற்று செப்.5ம் தேதி லாகூரில் நிறைவடைகிறது. அடுத்து, இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றில் விளையாடும். இந்த சுற்று செப். 6-15 வரை நடைபெறும். சூப்பர்-4 சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் பைனல் செப்.17ம் தேதி கொழும்புவில் நடைபெறும்.

*இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), விராத் கோஹ்லி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்சர் படேல், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர். ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்.

* பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்துலா ஷபிக், பகார் ஸமான், இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது ஹாரிஸ், முகமது ரிஸ்வான் (கீப்பர்), சவுத் ஷகீல், ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆஹா சல்மான், பாகீம் அஷ்ரப், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹரிஸ் ராவுப், நசீம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, உசாமா மிர்.

* வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், முகமது நயிம், முஷ்பிகுர் ரகிம், நஜ்முல் உசேன் ஷான்டோ, டன்ஸித் ஹசன், தவ்ஹீத் ஹ்ரிதய், அபிப் உசேன், மெகிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ஷமிம் உசேன், எபாதத் உசேன், ஹசன் மகமூத், முஸ்டாபிசுர் ரகுமான், நசும் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது.

* ஆப்கானிஸ்தான்: ஹஸ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், நஜிபுல்லா ஸத்ரன், ரகமதுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன், குல்பாதின் நயிப், கரிம் ஜனத், முகமது நபி, ரகமத் ஷா, ரஷித் கான், ஷராபுதீன் அஷ்ரப், அப்துல் ரகுமான், பஸல்லாக் பரூக்கி, முகமது சலீம், முஜீப் உர் ரகுமான், நூர் அகமது.

* நேபாளம்: ரோகித் பவுடெல் (கேப்டன்), ஆரிப் ஷேக், ஆசிப் ஷேக், திபேந்திரா சிங் அய்ரீ, குஷால் புர்டெல், அர்ஜுன் சவுத், பீம் ஷார்கி, கே.சி.கரண், குஷால் மல்லா, ஜி.சி.பிரதிஸ், சோம்பால் கமி, குல்சன் ஜா, சந்தீப் லாமிசேன், லலித் ராஜ்பன்ஷி, மவுசம் தகால், சந்தீப் ஜோரா, கிஷோர் மகதோ.

* இலங்கை: ஷனகா (கேப்டன்), அசலங்கா, பதிரணா, நிசங்கா, தனஞ்ஜெயா, ரஜிதா, கருணரத்னே, சமரவிக்ரமா, ஹேமந்தா, குசால் பெரேரா, தீக்‌ஷனா, பினுரா, குசால் மெண்டிஸ், வெல்லாலகே, மதுஷன்.

*இதுவரை சாம்பியன்கள்
* ஆசிய கோப்பை தொடர் 1984ல் தொடங்கி ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இடையில் 2016, 2022ல் மட்டும் டி20 ஆசிய கோப்பை போட்டியாக நடத்தப்பட்டது. நடப்பு சாம்பியனாக இலங்கை அணி (டி20) உள்ளது.

* இதுவரை நடந்த 15 ஆசிய கோப்பையில் அதிகபட்சமாக இந்தியா 7 முறை கோப்பையை வென்றுள்ளது.

* இலங்கை அணி 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

*6 முறை கோப்பையை முத்தமிட்டுள்ள இலங்கை அணி, 6 முறை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. 1984 முதல் 2010 வரை தொடர்ந்து 10 ஆசிய கோப்பை தொடர்களில் இலங்கை அணி பைனலில் விளையாடி உள்ளது. மொத்தத்தில் இதுவரை நடந்த 15 ஆசிய கோப்பைகளில், அந்த அணி 12 முறை பைனலில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா 10 முறை, பாகிஸ்தான் 5 முறை, வங்கதேசம் 3 முறை பைனலில் விளையாடி உள்ளன.

The post ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் முல்தானில் இன்று கோலாகல தொடக்கம்: 6 நாடுகள் பங்கேற்பு, முதல் போட்டியில் பாக். – நேபாளம் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Asia Cup ODI series ,Multan ,Pakistan ,Nepal ,Examination ,16th Asia Cup ODI ,India ,Dinakaran ,
× RELATED முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பிற்கு...